;
Athirady Tamil News

சிரியாவில் பயங்கரவாத குழுக்கள் மீது ஜோர்டான் அதிரடி தாக்குதல்

0

அம்மான்,

சிரியாவில் பயங்கரவாத குழுக்களை குறிவைத்து ஜோர்டான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஜோர்டான். இந்நாட்டின் கரக் மாகாணம் ஹமுத் கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் கடந்த 23ம் தேதி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த 3 பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

வான்வழி தாக்குதல்

இந்நிலையில், சிரியாவின் தென் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களை குறிவைத்து ஜோர்டான் விமானப்படை நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த பயங்கரவாத குழுக்கள் கடந்த வாரம் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது என்று ஜோர்டான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வான்வழி தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும், பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஜோர்டான் அரசு தெரிவித்துள்ளது. சிரியா மீது ஜோர்டான் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்திய சம்பவம் மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.