;
Athirady Tamil News

யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கில் முக்கிய நகர்வு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு, தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் ஐந்து காணிகளைக் கொள்வனவு செய்ததாக யோஷித ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கு தொடர்பான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து, மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு நவம்பர் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.