நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரைப் பகுதியில், கடலில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 30 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பெந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.