;
Athirady Tamil News

சீன பெண் உளவாளி சர்ச்சை… ரூ. 740 கோடி பங்குகளை இழந்த என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங்!

0

என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி ஆலிஸ் ஹுவாங் உடன் உறவில் இருந்ததால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.27 சதவிகிதம் குறைந்துள்ளது. அத்துடன் ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பும் ரூ.740 கோடி அளவில் குறைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஏஐ நிறுவனத்தின் சிஇஒ ஜென்சன் ஹுவாங் மீதான சர்ச்சை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமாக இருந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண், சீனாவுக்காகத் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவில் தொலைக்காட்சிச் செய்தியாளராகப் பணியாற்றிய இவா், பின்னா் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மெகாஸ்பீட்’ தரவு மைய நிறுவனத்தின் உயா்நிலை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தென்கிழக்கு ஆசியாவில் என்விடியாவின் முக்கிய வாடிக்கையாளராக உருவெடுத்த இந்த நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமாா் 480 கோடி டாலா் மதிப்புள்ள சிப்களை என்விடியாவிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஐ. தொழில்நுட்ப பந்தயத்தில் மையப் புள்ளியாக விளங்கும் என்விடியா நிறுவனத்தின் மேம்பட்ட குறைக்கடத்தி (செமிகண்டக்டர்) சிப்கள் மீது, சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு ஏற்றுமதித் தடைகளை விதித்துள்ள சூழலில் இவ்விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து தனது மன்னிப்பையும் ஜென்சன் ஹுவாங் வெளியிட்டுள்ளார். ஆனால், தேசிய பாதுகாப்பில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என ஜென்சன் ஹுவாங் உறுதியளித்துள்ளார். இது குறித்த விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தச் சர்ச்சையினால் என்விடியாவின் பங்குகள் இன்று (நவ.10) 7.97 சதவிகிதம் குறைந்துள்ளன. என்விடியாவில் 3.5% முதல் 4% பங்குகள் ஜென்சன் ஹுவாங் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் இதழின் கணிப்பின்படி ஜென்சன் ஹுவாங் 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 740 கோடி) பங்குகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 162.2 பில்லியனில் இருந்து 154.7 பில்லியனாக குறைந்து, அவர் கோடிஸ்வரர் பட்டியலில் 8லிருந்து 10ஆவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.

சீனாவிற்காக ரகசிய தகவல்களை சேகரித்துள்ளதாக உளவு அமைப்புகள் கூறியுள்ளன. அதில் கார்பரேட் நிறுவனத்தின் தகவல்கள் மட்டுமில்லாமல் தேசிய பாதுகாப்பிலும் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர், “என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் தொடா்பான உளவு குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இது தங்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரம்” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.