தமிழகத்தில் படகுடன் கரையொதுங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள்!
;
குருநகர் பகுதியை சேர்ந்த ஜனோஜன் (வயது 27) மற்றும் டிவோசன் (வயது 36) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குருநகரில் இருந்து தமது படகில் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்
அந்நிலையில் இருவரும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை பாம்பன் வடக்கு மீன்பிடித்துறைமுகத்தை அண்டிய பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்
கரையொதுங்கிய இருவரையும் தமிழக கடலோர காவல் துறையினர் மீட்டு , மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்த வேளை , பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமது படகு திசைமாறி இந்திய கடற்பரப்பினுள் அடித்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
அது தொடர்பில் கடலோர காவல் படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்