;
Athirady Tamil News

யாழில்.மெட்ரோ பேருந்துச் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை

0
மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில், மெட்ரோ பேருந்துச் சேவையை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.