யாழில். கோடிக்கணக்கில் பணமோசடி செய்தவரின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து தலைமறைவானவரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி , பல இலட்ச ரூபாய்க்களை பெற்று , அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது மோசடி செய்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனித்தனியாக முறைப்பாடுகளை வழங்கியிருந்தனர்
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் , தலைமறைவானார்.
அது தொடர்பில் பொலிஸார் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் , நீதிமன்று குறித்த நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில் , கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் தெரியாத நிலையில் , அந்நபரின் அசையும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கைளை எடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
