;
Athirady Tamil News

விமான சேவை முடங்கிய விவகாரம்: சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.4½ லட்சம் கோடி கேட்கும் டிரம்ப் அரசு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கி, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய இந்த முடக்கத்தால் விமானங்கள் பாதிக்கப்பட்டன. வானில் பறந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டன.

பழமையான விமானக் கட்டுப்பாட்டு அமைப்பில் செப்புக் கம்பிகளை மாற்றி புதிய ‘பைபர்’ கேபிள் இணைக்கும் பணியின்போது ஏற்பட்ட ரவுட்டர்’ கோளாறால், தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு விமானங்கள் நிறுத்தப்பட்டதாகப் போக்குவரத்துத்துறை மந்திரி சீன் டபி விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து, 50 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பை முழுமையாக நவீனப்படுத்த சுமார் ரூ.4½ லட்சம் கோடி (50 பில் லியன் டாலர்) கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்ப் நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், கடந்த ஆண்டு இதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ.1.18 லட்சம் கோடி (12.5 பில்லியன் டாலர்) நிதியே இன்னும் முழுமையாகச் செலவிடப்படாத நிலையில், தற்போது எதற்காக இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கிறீர்கள் என ஜனநாயகக் கட்சியினர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் அரசியல் மோதல் வெடித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.