;
Athirady Tamil News

ரஷியா: விபத்தில் சிக்கிய ராணுவ விமானம்; 19 பேர் பலி

0

மாஸ்கோ

ரஷியாவில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த ராணுவ போக்குவரத்துக்கான ஆன்டனோவ் ஆன்-12 ரக விமானம் ஒன்று தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சென்றது.

19 பேர் பலி

அந்த விமானம், 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், சைபீரியாவுக்கு மேற்கே கெமிரோவோ நகரருகே, யகுநோவோ கிராமம் அருகே வந்தபோது, மக்கள் அடர்த்தி அதிகம் இல்லாத பகுதியில் விபத்தில் சிக்கியது.

இதுபற்றி ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த சம்பவத்தில், 19 பேர் பலியாகி உள்ளனர். விபத்து பற்றி ரஷிய வான்வெளி படையின் ஆணையம் ஒன்று சம்பவ பகுதிக்கு சென்று, விமான விபத்து ஏற்பட்டதற்கான சூழல்களை பற்றி ஆய்வு செய்ய உள்ளது என தெரிவித்து உள்ளது. விமான படையின் நிபுணர்களும் விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.