அதிவிசேட தரத்திற்குத் தரமுயர்த்தப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்
;
இதற்கமைய, திறமை அடிப்படையிலான பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு உத்தியோகத்தர்களும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு உத்தியோகத்தர்களும் புதிய சேவை நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறமை அடிப்படையில் மரியான் அன்ரன் ஜேசுதாஸ் (காரைநகர் பிரதேச செயலகம்), தர்ஷினி கிருஷ்ணகுமார் (கரவெட்டி பிரதேச செயலகம்), நேசபவாணி தியாகச்சந்திரன் (தெல்லிப்பழை பிரதேச செயலகம்), திருநாவுக்கரசு கலைச்செல்வன் (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்), சிவகெளரி இந்திரஜித் (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்), இராஜசேகரம் அசோகன் (வேலணை பிரதேச செயலகம்) மற்றும் அம்பலம் பாலஸ்கரன் (நெடுந்தீவு பிரதேச செயலகம்) ஆகியோரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில், கிருஷ்ணராசா உதயராஜ் (ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்) மற்றும் பாலசிங்கம் ஜனனி (நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.