;
Athirady Tamil News

டிரோன் தாக்குதல்; கருங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

0

சோபியா

கருங்கடல் கடற்கரை பகுதியில் டிரோன் தாக்குதலால் சரக்கு கப்பல் மூழ்கியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான மோதலில் கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல்கேரிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், பல்கேரியாவின் கருங்கடல் கடற்கரை பகுதியில் டிரோன் தாக்குதலுக்கு ஆளான சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்க தொடங்கியது.

சமையல் கியாஸ்

அந்த கப்பலில், 3,400 டன் சமையல் கியாஸ் நிரப்பப்பட்டு இருந்தது. கியாஸ் ஹஸ்கி என பெயரிடப்பட்ட, லைபீரியா நாட்டு கொடியுடன் கூடிய அந்த கப்பல் நீரில் மூழ்கும் முன், அதற்கான சிக்னலை அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ளது.

எனினும், கப்பலில் இருந்து ஊழியர்கள் 19 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் வர்ணா என்ற நகரில் உள்ள விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதே கடற்கரை பகுதியில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் கோதுமை சுமந்து சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நேற்று நடந்த டிரோன் தாக்குதலில் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை காணவில்லை. அவர்கள் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.