முடங்கியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்-தொழிற்சங்கங்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தால் நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு
அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் நீண்டகாலச் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல்.20 சதவீதக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குதல்.மேலதிக நேரப் பணிக்கான (OT) கொடுப்பனவுகளில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்தல்.பின்வரும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி இவ்வடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழகத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தென்கிழக்
ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவை வழங்கும் செயற்பாடுகளில் பாரிய இடையூறுகள் ஏற்பட்டதுடன், பல்கலைக்கழகத்தின் வழமையான செயற்பாடுகளும் முடங்கின.ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்பட்டு வந்த போதிலும், நடைமுறையில் நிவாரணம் வழங்கக்கூடிய உறுதியான தீர்வுகள் 2027 வரவு–செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்படவில்லை எனத் தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழிற்சங்கங்களின் இக்கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக உரிய தீர்வை வழங்காவிட்டால், எதிர்காலத்தில் இதைவிடத் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனப் பல்கலைக்கழகச் சமூகத்தினர் மத்தியில் எதிர்பார்ப்பும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
