;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல்: 5 பேர் காயம் – 21 மாணவர்கள் விளக்கமறியலில்

0
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஐந்து மாணவர்கள் காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் 
திருநெல்வேலி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 2ஆம் வருடம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் குழு மோதல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் வீதியில் நின்று மோதலில் ஈடுபட்டதுடன் , மாணவன் ஒருவன் பிளேட்டினால் , இரு மாணவர்களுக்கு வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளான்.
இந்த மோதல் சம்பவத்தில் பிளேட்டினால் வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் , பிளேட்டினால் வெட்டி காயமேற்படுத்திய மாணவனையும் , குழுக்களாக வீதியில் மோதலில் ஈடுபட்டு , பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் , 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்கள் குழுக்களை சேர்ந்த 20 பேரையும் கைது செய்து யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்படுத்திய வேளை 21 மாணவர்களையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.