;
Athirady Tamil News
Daily Archives

12 September 2023

ஜெயிலில் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க கோரி கோர்ட்டில் மனு!!

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடுவை…

அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவுகிறதா? – அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

வியட்நாமுடன் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா சீனாவின் சர்வதேச செல்வாக்கைத் தடுக்க முயலவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போர் முடிவுக்கு வந்து 50…

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலி? பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை…

கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய ரிஷி சுனக் !!

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள், அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அவரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின்…

மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு அட்டூழியம்!!

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால், கங்போப்கி…

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய பாரிய திட்டம்: அதிருப்தியில் சீனா !!

சீனாவானது தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பண்டைய காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, ஆசியாவில் வணிகத்தில் முன்னிலை வகித்தது. இந்தப்…

தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாது: டி.கே. சிவக்குமார்!!

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை.…

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்..…

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடாவில் வசிக்கும்…

பாசிட்டிவ் சிக்னல்: மவுனம் கலைத்த சீனா!!

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம்…

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு: கோவிட் தடுப்பூசி காரணமா? (கட்டுரை)

கோவிட் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின், குறிப்பாக இளம் வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. இதற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை சிலர் காரணமாகக் கூறுகின்றனர். இதன் உண்மைத்…

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர்…

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை…

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்: மத்திய அமைச்சர்!!

சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும்…

கைதிகளை விடுவிக்க, 6 பில்லியன் டாலர் பணத்தை ரிலீஸ் செய்ய ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்!!

ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது. இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில்…

பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர், தானாக இந்தியாவுடன் இணையும் : வி.கே.சிங்!!

இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72). ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது…

ஜி-20 மாநாடு வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா-சீனா பாராட்டு!!

ஜி-20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 9, 10-ந்தேதிகளில் நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். ரஷிய அதிபர்…

தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். சனாதனம்…

இந்தியாவிற்கான எதிர்கால திட்டங்களை வகுக்கும் ராகுல் – எரிக் சொல்ஹெய்ம்!!

வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo). இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய…

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி?: நிதின் கட்காரி விளக்கம்!!

இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி…

மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2800 ஆக உயர்வு!!

மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மலை பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும்…

மற்றுமொரு ரயில் பயணி விழுந்து காயம் !!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி இன்று மாலை 5.45 மணியளவில் பயணித்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த பயணிகளில் ஒருவர் புலகஹகொட உப நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையா?

இலங்கை துறைமுக அதிகாரசபையில் 33000 லீற்றர் எரிபொருள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொறியியலாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை துறைமுக அதிகாரசபை பொறியியலாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கம்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: 6 உடற்பாகங்கள் மீட்பு !!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன. குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள்…

“ஜனாதிபதியின் குழு நகைச்சுவையானது” !!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. இது மக்களின் பணத்தை வீண் விரயம்…

தேசதுரோக வழக்கை 5 அல்லது 7 நீதிபதி அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது 1860ல் இந்திய தண்டனை சட்டத்தை (IPC) உருவாக்கினர். அப்போது இந்தியர்களை அடக்கி ஆளும் விதமாக 124ஏ எனும் பிரிவை சேர்த்தனர். அதன்படி, அரசாங்கத்தை எதிர்த்து கூறப்படும் கருத்துக்களுக்காகவும், அரசாங்கத்தை…

70-வது பிறந்த நாளில் அதிர்ஷ்டம்: இங்கிலாந்து மூதாட்டிக்கு லாட்டரியில் விழுந்த மெகா பம்பர்…

லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது.…

மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜனதா: ஜே.பி. நட்டாவுடன் மத்திய மந்திரி…

230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல்…

இரவோடிரவாக ரஷ்யாவில் கிம் ஜோங் உன் !!

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தமது நாட்டிற்கு விஜயம் செய்துள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வடகொரியத்…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை!! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக…

ஓட்டல் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த கேரள வங்கி ஊழியர்!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிரபல தனியார் ஓட்டல் நீச்சல் குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக மங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் கேரள மாநிலம்…

லிபியாவில் புயல்: 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு !!

கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி…

எகிறியது எலுமிச்சை விலை !!

நாடளாவீய ரீதியில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில்…

ஆமைகள் ஏன் இறக்கின்றன?

நாட்டின் பல்வேறு கடற்கரையோரங்களில் சமீபத்தில் பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்கிய ஆமைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்னவென நிபுணர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவரின்…

’தோட்டக்காட்டான்’ என்ற வசனம் நீக்கம் !!

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான '800' இல் இருந்து 'தோட்டக்காட்டான்' என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்…