;
Athirady Tamil News

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###################################

புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களான திரு.திருமதி. சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்விகளின் ஒருவரான செல்வி.மேகலா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவர் விரும்பிக் கேட்டுக் கொண்ட வகையில் முன்பள்ளி சின்னஞ் சிறார்களோடு இனிய பிறந்தநாள் கொண்டாட “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்பாடு செய்துள்ளது.

செல்வி. மேகலாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் சமாதான சிறுவர் முன்பள்ளி குழந்தைகளின் தேவையை முன்பள்ளி ஆசிரியைகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” தெரியப்படுத்தியதன் அடிப்படையில் அந்த குழந்தைகளின் தேவையை, தங்கள் மகளின் பிறந்தநாளில் நிறைவேற்றி வைக்கும்படி செல்வி.மேகலாவின் பெற்றோர்களான திரு.திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகள் நிதிப்பங்களிப்பு செய்துள்ளார்கள்.

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள சமாதான சிறுவர் பாலர் பாடசாலையில் 45 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றா்கள், இவர்கள் அனைவரும் அயற் கிராமங்களில் வாழும் நாளாந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் ஏதோ ஒரு வகையில் கற்றலுக்கான அடிப்படை வசதிகள் குறைவாகவே காணப்படுகின்ற சூழலில் இவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தான் சமாதான சிறுவர் பாலர்பாடசாலையின் கல்வி மேம்பாட்டுக்கும் அங்கே பயிலும் குழந்தைகளின் எதிர்கால கல்வி விருத்திக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி கொடையாளிகளின் நிதிப் பங்களிப்போடு அனுசரணை செய்து வருகிறது.

நாளை தமிழ் சிங்கள வருடப் பிறப்பாக இருந்தாலும் அனைத்து முன்பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டு மேகலாவின் பிறந்த தினத்து கொண்டாடியது விசேடமானது அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி மேகலா அவர்ளை “சகல கலைகளும் பெற்று, நீண்ட ஆயுளுடன் தேக ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” சமாதான சிறுவர்களுடன் அங்கே கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள், நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
13.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.