;
Athirady Tamil News

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
##########################

ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான திரு.கந்தையா, திருமதி.கந்தையா சீதேவன்பிள்ளை, திரு.சின்னத்துரை நடனசிவராசா ஆகியோரின் நினைவாக திரு.திருமதி. குணரெட்னம் தயாலினி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் அன்னதான நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.

நாட்டில் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தங்களது தாய், தந்தையரை நினைவு கூர்ந்து ஆடி அமாவாசை விரதநாள் தானமாக “அன்னதானம்” வழங்கி வைக்கும்படி,

சுவிஸ் பேர்ண் பிரேம்காடன் என்னுமிடத்தில் வசிக்கும் திரு.திருமதி. குணரெட்னம் தயாளினி குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் அமரர்களான திரு.கந்தையா, திருமதி.கந்தையா சீதேவன்பிள்ளை, திரு.சின்னத்துரை நடனசிவராசா ஆகியோரின் நினைவாகவும், அமரர்களான அனைத்து உறவுகளின் தாய், தந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவர்களின் நினைவாகவும் வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பூசையுடன், ஆடி அமாவாசை விரதநாள் தானமாக “விசேட அன்னதானம்” மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பல்வேறு உதவிகளை கடந்த காலங்களிலும் தமது தாய், தந்தையர் நினைவாக ஏற்கனவே இவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் கூறிக் கொள்வதோடு, இன்றைய நிகழ்வுக்கும் நிதிப் பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்,

மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் உடனடியாக சுவிஸ்வாழ் தமிழுறவான திரு.திருமதி. குணரட்ணம் தயாளினி குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு வழங்கிய நிதியில் மேற்படி விசேட அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று சித்தி விநாயகர் ஆலயத்தில் அமரர்களான திரு.கந்தையா, திருமதி.கந்தையா சீதேவன்பிள்ளை, திரு.சின்னத்துரை நடனசிவராசா ஆகியோரின் நினைவாக திரு.திருமதி. குணரெட்னம் தயாலினி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் வவுனியா கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளி ஆசிரியையும், சமூக தொண்டரும், மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளருமான திருமதி.பாலகிருஷ்ணன் யோகாநந்தி அவர்களின் ஒழுங்கமைப்பிலும், தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேடமான மோட்ஷ அட்ஷனை நடைபெற்று, பின்னர் மகேஸ்வர பூசையுடன், ஆலயத்தின் பிரதம குருக்களுக்கு தட்ஷனையுடன் தானத்தட்டு வழங்கப்பட்ட்துடன் பசுவுக்கு தானம் அளித்து, அடியார்கள் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேட அன்னதானம் வழங்கப்பட்டது.

மேற்படி விசேட அன்னதான நிகழ்வில், தலைவர் திரு.ஆறுமுகம், கோயில் குருக்கள் தவனேஸ்வரக்குருக்கள் ஐயா, , ராமர் பஜனை குழு தலைவர் திரு.புஷ்பராஜா, கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் திரு.கேசவன், சனசமூக நிலைய தலைவர்திரு. துரைராஜா, அயல் பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் விருந்தினராகக் கலந்து “அமரர்களான அனைவரதும் ஆத்மான சாந்தியடைய வேண்டி” பிரார்த்தித்ததுடன் ஆசி கூறி சென்றார்கள்.

யாழ். மாவிட்டபுரம் இடத்தைச் சேர்ந்தவரும், சுவிஸில் பேர்ண் பிரேம்கார்டன் இடத்தில் வசிக்கும் திரு.திருமதி. கந்தையா குணரெட்னம் அவர்கள் தனது பெற்றோரான அமரர்கள். கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாகவும், திருமதி.குணரட்ணம் தயாளினி அவர்கள் தனது தந்தை சின்னத்துரை நடனசிவராசா நினைவாகவும் “ஆடி அமாவாசையை” முன்னிட்டு அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வழங்கிய மேற்படி உதவிகள்.. தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கியமை சிறப்பானது. இவ்வாறான காலத்திற்கேற்ப தங்களின் குடும்ப உறவுகளின் நினைவாக சமூகப்பங்களிப்பு செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.

உதவி வழங்கிய சுவிஸ்வாழ் உறவான திரு.திருமதி. கந்தையா குணரட்ணம் தயாளினி குடும்பத்துக்கு, தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம்

அமரத்துவமடைந்த திரு.கந்தையா, திருமதி.கந்தையா சீதேவன்பிள்ளை, திரு.சின்னத்துரை நடனசிவராசா ஆகியோரின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வேண்டி கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.07.2022

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.