;
Athirady Tamil News

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ)

0

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ)

யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்காள இடர்கால கற்றலுக்கான வசதிக்கு அப்பியாசக் கொப்பிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இன்று இப்பிறந்தநாள் தாயக எல்லைக் கிராமமொன்றில் முதியோர், இளையோருடன் கொண்டாடப்பட்டது..

செல்வன்.பாபுஜி அவர்கள், புங்குடுதீவை சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்த சொக்கலிங்கம், நாகேஷ் தம்பதிகளின் பேரனும், அவர்களின் இரண்டாவது புதல்வியான, திரு.திருமதி.சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் ஏகபுதல்வனும் ஆவார்.

செல்வன்.பாபுஜி அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் கிராமமொன்றில் சிறுவர் சிறுமியர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் நிகழ்வை ஒழுங்குபடுத்தி கொண்டாடினார்கள்.

அதேநேரம் செல்வன்.பாபுஜி அவர்களது நிதிப் பங்களிப்பில் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும், பாலர் பாடசாலை குழந்தைகளுக்கும் கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது..

பிறந்தநாளான இன்று வன்னி எல்லைக் கிராமமொன்றில் அப்பிரதேச மாணவமாணவிகள் சிலரும் அவரது பெற்றோர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது, “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான மன்றத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

செல்வன் பாபுஜி அவர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு குறிப்பாக கொரோனா காலத்து பயணத்தடை காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிப் போயிருந்த சூழ்நிலையில் கூட மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக பல்வேறு சமூகநலப் பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் பிரான்சில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன்.பாபுஜி அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை,

தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

29.01.2023

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.