;
Athirady Tamil News

தாயக உறவுகளோடு சுவிஸ் வாழ் புங்குடுதீவு “சஜிதன் செந்தூரி” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

தாயக உறவுகளோடு சுவிஸ் வாழ் புங்குடுதீவு “சஜிதன் செந்தூரி” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#############################

இறைவன் வகுத்த இன்னாருக்கு
இன்னார் தான் என்று இன்று போட்ட
முடிச்சு நிகழ்கிறதோ இன்று..
கெட்டி மேளம் முழங்க மாங்கல்ய
மன்றத்தில் இணையும் இந்த
பிரியமான நெஞ்சங்களை
பேரன்போடு வாழ்த்துகிறோம்..

இன்பத்தில் இணைத்து
துன்பத்தில் தோள் கொடுத்து
கடமையில் கண்ணாயிருந்து

பிடிவாத குணங்களில் விட்டுக் கொடுத்து
உறவுகளுடன் ஒன்றாகக் கலந்து
தாம்பத்திய வார்த்தைக்கான
அர்த்தத்தை உணர்ந்து
மொத்தத்தில் குடும்பம் என்ற
ஒன்றில் சங்கமம் ஆகி
சிரிப்போடு வாழ வாழ்த்துகிறோம்.

தாயக பிரதேசமான புங்குடுதீவைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் திருமண நிகழ்வு சுவிஸ் நாட்டில் இன்றையதினம் 03.06.2023 இடம்பெற்றது. இதனை முன்னிட்டு பாலாமைல்கல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திரு.இருமதி சஜிதன் செந்தூரி திருமண நிகழ்வு சிற்பாக அமைய வேண்டி விசேட பூசையினையும் அதனைத் தொடர்ந்து பிறிதோர் இடத்தில் விசேட மதிய உணவுடன் கூடிய திருமண விருந்துபசாரமும் திரு.திருமதி.கிருபா கலைமதி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

அவ்வாறே புதுத் தம்பதிகள் தமது திருமணத்தை தாயக உறவுகளோடு கொண்டாட வேண்டி குறிப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் சிறப்பாக விசேட மதிய உணவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வவுனியா கிராமமொன்றில் அங்கு வாழும் குடும்பங்களுக்கு மதிய விசேட உணவு வழங்கப்பட்டது.

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பீல் பிரதேசத்தில் வாழ்பவர்களுமான திரு.திருமதி. சிவநேசன் வசந்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் செல்வன் சஜிதன் அவர்களுக்கும், புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் பிரதேசத்தில் வாழ்பவர்களுமான திரு.திருமதி. கிருபா கலைமதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி செல்வி செந்தூரி ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில் இன்றையதினம் 03.06.2023 அன்று திருமண நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.

இந்நிகழ்வை தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் விசேடமாக ஆலய பூசை மற்றும் விசேட மதிய விருந்துபசாரம் வழங்கி சிறப்பாக கொண்டாடியது. திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட திரு.திருமதி சஜிதன் செந்தூரி அவர்களின் சார்பில் சுவிஸ் சூறிச்சில் வாழும் திரு.திருமதி. கிருபா கலைமதி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் அவர்கள் விரும்பிய தாயக உறவுகளுக்கான திருமண விசேட விருந்துபசாரம் இன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் சிறப்பான வகையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட கிராமத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுத் தம்பதிகளான திரு.திருமதி சஜிதன் செந்தூரி தம்பதிகள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

அத்தோடு திருமண நாளினை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு மதிய விசேட உணவினை வழங்குவதற்கு நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.06.2023

தாயக உறவுகளோடு சுவிஸ் வாழ் புங்குடுதீவு “சஜிதன் செந்தூரி” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.