;
Athirady Tamil News

பாயமரக் கப்பல் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் சாகச பயணம்..!!

0

இந்திய கடற்படையில் மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா, நீலகண்ட் உள்ளிட்ட 6 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகள் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது போன்ற பயணங்கள் உதவுகின்றன. இந்நிலையில் கோவாவில் இருந்து மொரிஷியஸ் தீவின் போர்ட் லூயிஸ் வரை கடல் பயணத்தை காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து துவக்கி வைத்தார். தாரிணி பாய்மரக் கப்பலில் மூன்று பெண் அதிகாரிகள் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 2500 கடல் மைல் தூரத்தை இந்த குழு 21 நாட்களுக்குள் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடினமான சாகசம் மிக்க இந்த கடல் பயணத்தின் போது தீவிர வானிலை, பருவமழை மறறும் கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.