;
Athirady Tamil News

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கஷ்ட பிரதேச பாடசாலையான பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலத்தை சேர்ந்த தரம் 1 தொடக்கம் தரம் 8 வரையான 57 மாணவர்களுக்கும் மற்றும் முறக்கொட்டான் சேனை இராம கிருஸ்ன மிசன் வித்தியாலய தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான 88 மாணவர்களுக்கும் வியாழக்கிழமை(25) குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இக்கற்றல் உபகரணங்களை இணைந்த கரங்களின் மாவட்ட அமைப்பாளர்களான லோ.கஜரூபன் , கண்ணன் , சங்கீத், டெரித்,ரிஸ்வான் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன் போது சுமார் 145 மாணவ மாணவிகளுக்கு மூன்று இலட்சம் ரூபா (300000) பெறுமதியுடைய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது மாவட்ட இணைப்பாளர்களில் ஒருவரான லோ. கஜரூபன் தெரிவிக்கையில்

பின்தங்கிய கிராமத்தில் வாழ்கின்ற கல்வி கற்று வருகின்ற வறிய மாணவ செல்வங்களுக்கான கற்றல் உபகரணங்களை எங்களுடைய இந்த இணைந்த கரங்கள் அமைப்பானது வழங்கி வருகின்றது. எவ்விதமான வேறுபாடுகளும் இல்லாது சகல பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கும் இச் சேவையினை வழங்கி வருகின்றோம் .எமது அமைப்பானது குறுகிய காலத்தில் இத் திட்டத்தினை ஆரம்பித்து சுமார் 4 மாத காலத்தில் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளது
சில பாடசாலைகளின் வேண்டுதல்களுக்கு அமைவாக தரம் 5 புலமை பரீட்சை மாதிரி வினத்தாள் களையும் சுமார் 400 க்கு மேற்பட்ட வினாத்தாள்களையம் வழங்கியிருந்தோம் இதனை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் நன்கொடையாளர் களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.