;
Athirady Tamil News

உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையை மூட திட்டமிடும் ஈரான்

0

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து ஈரான் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ஈரான் பரிசீலித்து வருவதாக
ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கான உலகின் மிக முக்கியமான நுழைவாயிலாகும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி.

ஈரானிய நாடாளுமன்ற பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் எஸ்மாயில் கோசாரி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை குறிப்பிட்டு வெளியான தகவலில், அந்த மிக முக்கியமானப் பாதையை மூடுவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளும் தொடர்ந்து உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்த தகவல் கசிந்துள்ளது. ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்கள் மீது பல எண்ணிக்கையிலான ஏவுகணைகள் வீசப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மேற்கோள் காட்டி, ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய விமானங்கள் ஈராக்கிய வான்வெளியை அத்துமீறி நுழைவதைத் தடுக்குமாறு ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார சீர்குலைவுகளை
மேலும், மஸ்கட்டில் நடைபெறவிருந்த ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஓமன் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதல்கள் ஈரான் தலைநகரை நோக்கிய பாதையை தெளிவுபடுத்தியதாகக் கூறியது.

மிக விரைவில் தெஹ்ரான் நகரம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வரும் என்றும் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது உலகளாவிய எண்ணெய் விலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும், இது உலகளாவிய பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் ஈரானுக்கு மிக முக்கியமானதாக இருப்பதால், ஈரானின் பொருளாதாரம் கூட பாதிக்கப்படலாம். மட்டுமின்றி, கடல்வழி வர்த்தகத்திற்கு ஏற்படும் இடையூறு ஈரானில் உள்ள ஆட்சியில் பிற தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.