;
Athirady Tamil News

தென் இலங்கை போராளிகள் தமிழரின் அரசியல் நீதி கோரிக்கையை ஏற்க வேண்டும்! சிறீகாந்தா!!

0

தென் இலங்கையில் ஐனநாயகத்தை நிலைநாட்ட போராடும் போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

பாரிய பொருளாதார நெருக்கடி நிலையின் மத்தியிலும் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்து நிற்கின்ற சூழ்நிலையிலே,

சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கப் போவதாகவும் மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளை மாலையில் இருந்து போராட்டம் நடாத்தப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மத்தியில் இவ்வாறான ஒரு கொண்டாட்டம் தேவைதானா அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே இதில் கலந்து கொள்ள முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் எழுப்பி கத்தோலிக்க திருச்சபை இதனை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கின்றது.

பல்வேறு சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்பன எதிர்வரும் 75வது சுதந்திர தினத்தை துக்க நாளாக கரி நாளாக பிரகடனப் படுத்தியிருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பிலே முடிவடையும் விதத்திலே ஒரு பாரிய பேரணிக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

இந்த அழைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வெளியிட்டு இருக்கின்ற சூழ்நிலையில் சில கருத்துக்களை பொது வெளியில் முன் வைப்பது பொருத்தமானது அவசியமானது என்று கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது இது முதல் தடவையல்ல,

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் நீதி தொடர்பில் ஒரு திட்டவட்டமான நிலைப்பாட்டிற்கு தென் இலங்கையிலே ஐனநாயகத்தின் பெயரில் குரல் எழுப்புகின்ற போராடுகின்ற அனைத்து முற்போக்கு சக்திகளும் வர வேண்டும் எனமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வாரங்கள் போதும் ஆனால் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்து இருக்கின்ற சூழ்நிலையிலே,

அது தொடர்பிலே அரசாங்க தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் இப்போது எழுந்து கொண்டிருக்கின்றன பதவியை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்களாக கடைசிவரையில் இருந்தவர்கள் இப்பொழுதும் இருந்து கொண்டிருப்பவர்கள் அரசாங்க தரப்பிலே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறை முற்படுத்தப்படுத்துவதற்கு எதிராக போர் கொடி தூக்குகின்றார்கள்.

தென் இலங்கையில் ஜனநாயக எழுச்சியை மீள கொண்டுவர தயாராக இருக்கின்ற இளைஞர் சந்ததியினருக்கு இளைஞர்யுவதிகளுக்கும் அரசியல் நடவடிக்கையாளர்களுக்கும் தொழிற்சங்க வாதிகளுக்கும் ஒரு செய்தியினை தாழ்மையாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகின்றோம்.

தமிழ்மக்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையிலே இந்த நாட்டிலே ஆட்சி அமைப்பு முறையை மாற்றி அமைப்பதற்கு சிங்கள முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

ஐனநாயக போராளிகளாக தென் பகுதியிலே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றவர்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை எமது கோரிக்கையாகும்.

எனவே தமிழ் மக்களின் கோரிக்கையைஅவர்கள் ஏற்காதவரையில் அவர்களின் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது.

எனவே தென்பகுதியில் ஜனநாயக ரீதியில் போராடும் இளைஞர் யுவதிகள் அரசியல்வாதிகள் முற்போக்கு சக்திகள் எமது தமிழ் மக்களின் அரசியல் நீதியினை ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

13 ஐ அமுல் படுத்த வேண்டாம்: ஜனாதிபதிக்கு மாநாயக்க தேரர்கள் கடிதம் !!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முன் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும் – பேராசிரியர் பீரிஸ்!!

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி!!

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமும் கிடையாது – தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்!!

13 ஆவது அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

13 ஆவது அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார் – சன்ன ஜயசுமண!!

தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார் – சன்ன ஜயசுமண!!

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் – சரத் வீரசேகர!!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் – விமல்!!

13ஆவது திருத்தத்தை இனவாதமாக கையாள முயற்சி – கிரியெல்ல!!

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறும் செயல் – பேராசிரியர் சர்வேஸ்வரன்!!

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது – விமல்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.