;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து!! (PHOTOS)

0

யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதி அளித்ததாக அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் இன்று நல்ல ஆதீனத்திற்கு வருகை தந்தார் ஆதீன சுவாமிகளுடன் அகில இலங்கை இந்து மாவட்டத்தின் சார்பில் நானும் அவருடன் கலந்துரையாடினோம்.

அவரிடம் மிக முக்கியமாக நாம் விடுத்த வேண்டுகோள் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் இருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை நீங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும்.

மேலும் ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரால் நாட்டில்சில பாடசாலைகளுக்கு பேருந்து வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற இரண்டு பெண் இந்து பாடசாலைகள்அதாவது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, தேசிய வீரராக கருதப்பட்ட ராமநாதனுடைய பாடசாலையாகிய இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதற்கு அவர் அது வழங்க முடியும் நான் அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.