;
Athirady Tamil News

கால்நடை டாக்டர், உளவியலாளர் பணிக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர்- 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்தனர்.

குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிகளுக்கான தேர்வு 15-ந்தேதியும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிகளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன. தேர்வர்கள் தங்களின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.