;
Athirady Tamil News

யாழில் கேக் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த கதி

0

யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோ அசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் நேற்றைய தினம் தனது வீட்டில் கேக் மற்றும் தேநீர் என்பன உட்கொண்டு சிறிது நேரத்தில் மயக்கமுற்றுளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.