;
Athirady Tamil News

நடுக்கடலில் பற்றி எரிகிறதா ஈரானின் 3 கப்பல்கள் ? வளைகுடாவில் பரபரப்பு

0

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் மூன்று கப்பல்கள் தீப்பிடித்து எரிவது போல காட்சிகள் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே, நாசாவின் ‘ஃபயர் இன்ஃபர்மேஷன் ஃபார் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ வரைபடம் கூட ஓமன் வளைகுடாவில் மூன்று இடங்களில் தீப்பற்றியிருப்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளது.

வெளியான காட்சிகள் உண்மையா?
அதேவேளை உலகில் பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது.

2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கடந்த மாதம் வரை, ஒரு நாளைக்கு சுமார் 1.78 கோடி முதல் 2.08 கோடி பேரல் கச்சா எண்ணெய், கண்டன்சேட் மற்றும் எரிபொருட்கள் இந்த ஜலசந்தி வழியாகச் சென்றுள்ளதாக வோர்டெக்ஸா (Vortexa) தரவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அல்லது ஹோர் ஃபக்கான் கொள்கலன் முனையத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.