;
Athirady Tamil News

ரூ. 45 லட்சத்துக்கு விற்பனையான பழைய ஐபோன்!!

0

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், முதல் தலைமுறை ஐபோனிற்கான மதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் பல்வேறு புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பழைய ஐபோன் அதிக விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ஒரிஜினல் ஐபோன் மாடல் 50 ஆயிரம் டலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக முதல் தலைமுறை ஐபோன் மாடல் அதன் ஒரிஜினல் பெட்டியில் இருக்கும் நிலையில் 63 ஆயிரத்திற்கும் அதிக டாலர்களுக்கு விற்பனையாகி இருந்தது.

தற்போது சீல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் ஒரிஜினல் ஐபோன் மாடல் 55 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்து 44 ஆயிரத்து 402-க்கு விற்பனையாகி இருக்கிறது. முன்னதாக பலமுறை ஒரிஜினல் ஐபோன் மாடல்கள் அதன் திறக்கப்படாத நிலையில் 35 ஆயிரம் மற்றும் 39 ஆயிரம் டாலர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சத்து 91 ஆயிரத்து 892 மற்றும் ரூ. 32 லட்சத்து 22 ஆயிரத்து 394-க்கு விற்பனையாகி இருக்கின்றன. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பழைய ஐபோனிற்கான மதிப்பு இன்றும் குறையவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர பொருட்களுக்கும் இதே போன்ற மதிப்பு கிடைக்கிறது.

அதன்படி ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கையொப்பமிட்ட ஐபோன் 11 மாடல் 4 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 490-க்கு விற்பனையாகி இருக்கிறது. இதே போன்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் தொழில்நுட்ப குறிப்புகள் 12 ஆயிரத்து 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 755-க்கு விற்பனையாகி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.