;
Athirady Tamil News

கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையால் தீவகத்தில் 40 குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

0

ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.தவராசா அவர்களின் பாரியாரான அமரர்.சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் நினைவாக தீவகத்தின் வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், சாவகச்சேரி வர்த்தக சங்க தலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, சூழகம் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன், மற்றும் கிராமசேவகர் ச.சிறீதரன் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.
ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கௌரி சங்கரி தவராசா அம்மையார் ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு அதில் பங்காற்றிய 75 பொதுமக்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு பொதிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த பொது நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.தவராசா அவர்கள் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.