;
Athirady Tamil News

சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு

0
video link:

“சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியது.

இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை தானம் செய்தமையை காண முடிந்தது.

“ஓர் உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போல் ஆவார்” எனும் ஹதீஸிற்கிணங்க சகலருக்கும் குருதிக்கொடை வழங்க சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இரத்ததான வழங்கக்கூடியவர்கள் அஸ்வர் (0774804316), நஸீர் (0776968676), ஜெமீன் (0779000771) ஆகியோரின்
தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குருதிக்கொடை வழங்கும் பெண்களுக்காக பிரத்யோக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.