கணவன், மனைவி கதைச்சொன்னார் ஏரான் !!

அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன முன்மொழிந்தார்.
வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் கூட கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. அப்படியானால் அமைச்சரவையில் குடும்பங்கள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.