“இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும்” சுப்பிரமணியன் சுவாமி!! (வீடியோ)

இந்திய மூத்த அரசியல்வாதியும், மஹிந்தவின் நெருங்கிய சகாவுமான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சர்ச்சைக் கருத்து ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்திய ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும். தற்போது இந்திய எதிர்ப்பு வெளிநாட்டு சக்திகள், மக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது செய்தியில் இலங்கையை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், இலங்கையில் பதிவாகும் அமைதியின்மை தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.