சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், “அதிரடி” இணையம் மீது தாக்குதல்.. (படங்கள்)
சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய நிர்வாகக் குளறுபடியால், “அதிரடி” இணையம் மீது தாக்குதல்.. (படங்கள்)
கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகசபைக்குள் நடைபெற்று வரும் குளறுபடிகள் அனைத்தும் யாவரும் அறிந்ததே, இதனை உடனுக்குடன் “அதிரடி” இணையம் ஆதாரத்துடன் வெளிக்கொணர்ந்தது தெரிந்ததே.
இதனை மூடிமறைக்கும் வகையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ள ஆலய பொதுச்சபைக்கான அழைப்பிதழில் “அதிரடி” இணையம் சார்ந்து, பல தவறான, உண்மைக்குப் புறம்பான தகவலையும் பிரசுரித்து உள்ளனர்.
சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாக சிக்கல்களையோ, கருத்து முரண்பாடுகளையோ சுமூகமாக தமக்கிடையே தீர்க்கவோ, அன்றில் கணக்கு வழக்குகளையோ சரியான முறையில் முன்வைக்க முடியாத சூழ்நிலையில் உண்மைக்கு புறம்பான வகையில் பலதரவுகளை தற்போதைய சுவிஸ் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
ஆலய நிர்வாக விடயத்தை நீங்களே உங்களுக்குள்ளேயே சுமூகமாக தீர்க்காமல் மீண்டும், மீண்டும் தவறான கண்ணோட்டத்தில் “அதிரடி” இணையம் மீது பழிசுமத்தும் வகையில் தற்போதைய நிர்வாகம் நடந்துள்ளதாக “அதிரடி” இணையம் கருதுகிறது
நீங்கள் ஆலய பொதுச்சபை குறித்த அழைப்பிதழில் “உண்மைக்கு புறம்பாகவும், தனிநபர் விரோதம் காரணமாகவும்” தவறாக தகவலை அதிரடி இணையம் சார்ந்து பிரசுரித்துள்ளீர்கள், அதனை உங்களால் நிரூபிக்க முடியுமாயின் இன்றே சுவிஸ் சட்டத்தின் (போலீஸ், நீதிமன்றம்) மூலம் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக “அதிரடி” இணையம் சவால் விடுக்கின்றது.
மேற்படி குறிப்பிட்ட விடயத்தை உடன் நிரூபிக்குமாறு தாழ்மையுடன் அதிரடி இணையம் சார்பாக மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம், அப்படி இல்லாவிடின் “இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது” என நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக “அதிரடி” இணையம் கருதிக் கொள்ளும். நன்றி
“அதிரடி” இணைய நிர்வாகம்.
athirady2014@gmail.com