;
Athirady Tamil News

யாழில் அர்ச்சகர்கள் அடிதடியில் பறிபோன உயிர்; நடந்தது என்ன!

0

யாழ் நயினாதீவில் இரு குருக்கள்மாரிடையேயான மோதலில் வாளால் வெட்டிக் கிருஷ்ணகுமார் ஐயா கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிசார் விசாரணை
தொழில் நிமிர்த்தம் யாழ் நயினாதீவுக்கு சென்று தங்கியிருந்த வேளை யாழ் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய குருக்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அர்ச்சகர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மற்றொரு நபர் கத்தியால் குத்தி இவரைக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறைவனுக்கு பூசைசெய்யும் அர்ச்சரகள் , அடிதடியில் இறங்கியதோடு வாளால் வெட்டிகொல்லபப்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.