;
Athirady Tamil News

துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!

0

துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஈரான் மீண்டும் துருக்கி மீது தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் முக்கிய கட்டடங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்பட அவரின் குடும்பத்தில் பலர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், செளவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே துருக்கி வான்வெளிகளில் ஈரான் படையினர் மீண்டும் ஏவுகணை வீசித் தாக்குதல் முயற்சி நடத்தியுள்ளது. ஈரானின் இரண்டாவது ஏவுகணையை முறியடித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

ஈரானின் தொடர் தாக்குதலால், துருக்கியின் அதானா பகுதியில் உள்ள தூதரத்தை அமெரிக்கா மூடியுள்ளது. மேலும், அத்தியாவசிப் பணிகளில் இல்லாத ஊழியர்கள் வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமெரிக்க தூதரம் பதிவிட்டுள்ளதாவது:

மார்ச் 9, 2026 அன்று, பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவசரநிலை அல்லாத அமெரிக்க அரசு ஊழியர்கள் மற்றும் அமெரிக்க அரசு ஊழியர் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதானாவின் துணைத் தூதரகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தென்கிழக்கு துருக்கியில் உள்ள அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுமாறு வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.