;
Athirady Tamil News

“மொத்தம் 17,000..” பொத்து பொத்துனு விழும் பொருட்கள்.. தலையில் கை வைத்து ஓடும் மக்கள்.. என்னாச்சு!!

0

நியூசிலாந்து நாடு இப்போது ஒரு மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அங்கே தெருக்களில் மக்களால் நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு மேல் உள்ள குட்டி தெய்வ நாடு நியூசிலாந்து.. தீவுக் கூட்டங்களால் ஆன நியூஸ்லெயில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனாலும் உலக அளவில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து உள்ளது.

இதனிடையே அங்கே இப்போது மிகவும் வினோதமான ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது அங்கே உள்ள ஒரு தெரு விளக்கில் தொடங்கியது. மேலே இருந்த பல்பு முதலில் பலவீனமாகித் தள்ளாடியது. பின்னர் அது அப்படியே விழுந்து நொறுங்கி உடைத்தது. சுமார் 12 கிலோ எடை கொண்ட அது மேலே இருந்து கீழே தலைநகர் வெலிங்டனின் நடைபாதையில் விழுந்து நொறுங்கியது.

நியூசிலாந்து: முதலில் ஒரு விளக்கு மட்டும் கீழே விழுந்து உடைந்த போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பின்னர் வரிசையாகப் பல விளக்குகள் இதே போலக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது. இது இப்போது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதையடுத்து அங்கே உள்ள ஊடகங்கள் ஃபோட்டோ உடன் இது குறித்த செய்திகளை வெளியிடத் தொடங்கின. பொதுமக்களும் வெலிங்டன் கவுன்சிலுக்கு புகார் அளித்தனர்.. இது தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவின.

அதன் பின்னர் உள்ளூர் நிர்வாகிகள் ஆய்வு செய்ததில் சுமார் 100 பல்புகள் இதுபோல உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர் ஆபத்தில் உள்ள பல்புகளின் எண்ணிக்கை 1000ஆக அதிகரித்தது. வெகு சீக்கிரமாகவே அங்கே உள்ள அனைத்து 17 ஆயிரம் பல்புகளும் கீழே விழும் ஆபத்து இருப்பதாக மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் உள்ள ஒவ்வொரு தெரு விளக்குகளும் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் கிழ விழுந்து நொறுங்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 11 கிலோ எடை: அங்கே இருக்கும் அனைத்து தெரு விளக்குகளிலும் ஏதோ ஒரு தவறு உள்ளதாக வெலிங்டன் நகர சபை தெரிவித்துள்ளது. மேலும், யாராவது பல்பு கீழே விழுவதைப் பார்த்தால் உடனடியாக புகாரளிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இதுபோல பல்பு விழும் சம்பவங்களில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த பல்புகளின் எடை ஒவ்வொன்றும் சுமார் 11 கிலோ இருக்கும் நிலையில், அவை குறிப்பிடத்தக்கச் சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை.

மேலே இருந்து விழும் ஒவ்வொரு பல்புகளும் ஒரு கார் டயர் அளவுக்கு எடை கொண்டது என்பதால் அதன் சேதம் அதிகமாகவே இருக்கிறது. பல்பு விழும் போது கீழே இருந்தால், கடுமையாக அல்லது சில சமயம் உயிரே போகும் ஆபத்து கூட இருப்பதாக நியூசிலாந்து கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் மேக்லீன் எச்சரித்துள்ளார். என்ன பிரச்சினை: அங்கே உள்ள எல்இடி விளக்குளில் இருக்கும் அலுமினியம்- அலாய் அடாப்டர் பகுதி தான் மிஸ்டேக் இருக்கும் பகுதியாகும். இதுதான் அங்கே உள்ள மின்விளக்குகளைக் கம்பங்களுடன். இதில் பிரச்சினை என்னவென்றால் அந்த அடாப்டர்கள் அங்கே வெலிங்டனில் வீசும் பலத்த காற்றுக்கு ஏற்றதாக இல்லை. இதன் காரணமாகவே ஓரளவுக்குக் காற்று அடித்தாலே அவை தரையில் விழுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுபோல சுமார் 17 தெரு விளக்குகள் கீழே விழுந்துள்ளன. இந்தாண்டு இந்த பிரச்சினை வெளியே வந்த நிலையில், சுமார் 161 விளக்குகள் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேயர் டோரி வனாவ் தெரிவித்துள்ளார். மேலும், பல்புகளில் வெளிச்சம் குறைந்தால் அது விழும் அறிகுறி என்றும் அப்படியிருந்தால் உடனடியாக தங்களுக்குத் தெரியப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு செலவாகும்: புகார் பெறப்பட்டால், அடுத்த 2 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பல்பை சரி செய்து விடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது நியூசிலாந்து தலைநகருக்குப் பெரிய அபாயத்தையும் சிக்கலையும் கொடுத்துள்ளது. அங்கே இந்த பிரச்சினை கண்டறியப்பட்டதில் இருந்து சுமார் 600 பல்புகளை மட்டுமே மாற்றியுள்ளன. அங்கே இருக்கும் அனைத்தையும் சரிசெய்ய சுமார் NZ$6 மில்லியன் (30 கோடி ரூபாய்) செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் அங்கே இருக்கும் மத்திய அரசிடமும் உதவி கோரியுள்ளனர். முதற்கட்டமாக அதிகம் காற்று வீசும் பகுதிகளில் இருக்கும் 3,200 கனமான விளக்குகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.