;
Athirady Tamil News

ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக பெரும் போராட்டம்., 1.6 லட்சம் பேர் பங்கேற்பு

0

ஜேர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் அசைவுகளுக்கு எதிராக பெர்லினில் மொத்தம் 1,60,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர், இப்போராட்டத்தில் 2,00,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) கட்சி, தீவிர வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கையை கண்டித்து போராட்டக்காரர்கள் “Shame on you CDU” என முழக்கமிட்டுள்ளனர்.

நெருக்கடியான தேர்தல் சூழல்
ஜேர்மனியில் பிப்ரவரி 23 அன்று நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, CDU கட்சி AfD-வின் ஆதரவைப் பெற கொள்கைகளை மாற்றியுள்ளது.

இதில் புகலிட கோரிக்கையாளர்களை நாட்டின் எல்லைகளில் தடுத்து நிறுத்தும் சட்டம் முதன்மையாக உள்ளது.

CDU தலைவர் பிரிட்ரிக் மெர்ஸ், AfD ஆதரவை எதிர்க்கிறார் என்றாலும், நாடாளுமன்ற விவாதங்களில் AfD உறுப்பினர்கள் CDU-விற்கு கரவொலிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது நியாயமான அரசியலா அல்லது ஆபத்தான முயற்சியா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள், சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல் கூட AfD-யுடன் கூட்டணி அமைப்பது “பெரிய தவறு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் ஜேர்மனியின் அரசியல் நிலையை மிகப் பெரிய மாற்றத்திற்கு கொண்டு செல்லக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.