கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு
பெப்ரவரி 21 இல் அமையும் உலக தாய் மொழி நாளையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நடத்திய உலக தாய் மொழி தின நிகழ்வு 19.02.2025 புதன்கிழமை காலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை கிறிஸ்தவ நெறி ஆசிரிய மாணவி கமலினி சுதாகர் நெறிப்படுத்தினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி.ஆ. நித்திலவர்ணன் பங்குகொண்டதோடு ஆசியுரையையும் வழங்கினார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி முதுமாணி கற்கைநெறி ஆசிரியர் திருமதி. மதுரா முகுந்தன் தாய்மொழியைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி உஷாநந்தினி விமல்ராஜ் கவிதை வழங்கினார்.
கலாசாலை விரிவுரையாளர் வேலும் மயிலும் சேந்தன் தமிழ் மரபுரிமை ஆய்வுகளும் , அதன் சமகால போக்குகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கலாசாலை அதிபரின் நிறையுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.






