;
Athirady Tamil News

வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை; அச்சத்தில் சர்வதேசம்

0

தற்போது, புதிய அதி நவீன ரொக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுத சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள நிலையில் இந்த சோதனை சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய ஆயுத சோதனைகளை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் சற்று தணிந்திருந்தாலும், இன்னமும் ஒரு சுமுகமற்ற சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கஜனாதிபதி ட்ரம்ப் “அடுத்த இலக்கு வடகொரியா தான்” என குறிப்பிட்டதைத் தொடர்ந்து, வடகொரியா தனது இராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வடகொரியா அண்மையில் ‘சோஹியோன்’ என்ற 5,000 தொன் எடையுள்ள அதிநவீன போர்க்கப்பலைத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.

இது குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் “எங்களது நீண்ட தூரத் தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் அனைத்தும் அதி நவீனமாக மேம்படுத்தப்பட்டவையாக மாற்றப்பட்டிருப்பதை விரைவில் எங்களின் எதிரிகள் அறியச் செய்வோம் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.