தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரி வரும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெல்லிப்பழை வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடலை நடாத்தினார்.
