;
Athirady Tamil News

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

0

யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தோழர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர், வீதிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபை உதவி பணிப்பாளர்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலை நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதி மக்கள் எதிர்நோக்கும் எரி்பொருள் பிரச்சினை தொடர்பாகவும், போக்குவரத்து பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.