;
Athirady Tamil News

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு

0

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தாதியர்களின் தன்னலமற்ற சேவை, நோயாளிகளுக்கான அக்கறை மற்றும் சுகாதாரத் துறையில் அவர்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கு பாராட்டப்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். றயிஸ் ,பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், கணக்காளர் யு.எல்.ஜவாஹிர், தாதிய மேற்பாரவை உத்தியோகத்தர், உள்ளிட்ட வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.