;
Athirady Tamil News

நைஜீரிய இராணுவ வான் தாக்குதலில் 100 பேர் பலி

0

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 10ம் தேதி ஜாம்பாரா மாகாணத்தில் உள்ள தும்பா மார்க்கெட் மீது விமானப்படைத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில், 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாக ‘ அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களில் 80 பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை நைஜீரிய ராணுவம் மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.