அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்தோடு அல்லப்பிட்டி சேமக் காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
