;
Athirady Tamil News

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார் அதிர்ச்சி தகவல்

0

ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், நான்காவது முயற்சியில் கணவரின் கதையை திட்டமிட்டபடி அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து முடித்துள்ளார்

இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனா ரகுவன்சி தேனிலவு கொண்டாடுவதற்காக மேகாலயாவுக்கு வந்திருந்தனர். அப்போது சோனா தனது காதலர் ராஜா குஷ்வாஹாவுடன் சேர்ந்து கணவர் ராஜா ரகுவன்சியை 3 பேர் அடங்கிய கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார்.

சோனா இதற்கு முன்பாக 3 முறை ராஜா ரகுவன்சியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில் குவஹாத்தியில் வைத்து ராஜா ரகுவன்சியை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அடுத்ததாக மேகாலயாவின் சோஹ்ராவில் வைத்து இரண்டு முறை கணவரை கொலை செய்ய சோனா முயற்சித்துள்ளார். அதுவும் நிறைவேறவில்லை. இறுதியாக 4 வது முயற்சியில் வெய்சாடோங் அருவியில் வைத்து தனது கணவரை கொல்லும் திட்டத்தை சோனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

.

கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ரகுவன்சியை சோனா பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் மூன்று முறை உடலை அப்புறப்படுத்த இடம் கிடைக்கவில்லை என்பதால் கணவரை கொல்லும் திட்டத்தை காதலன் ராஜ் குஷ்வாகவுடன் சேர்ந்து சோனா ஒத்திப்போட்டுள்ளார். இறுதியில் வெய்சாடோங்கில் சூழ்நிலை சாதகமாக இருந்ததை பயன்படுத்தி அவர்கள் கொலைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு மூளையாக ராஜ் குஷ்வாஹா செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று இந்த கொலைத் திட்டத்தில் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ரகுவன்சியின் மனைவி சோனம் என்று அடைாயளம் காட்டுவதற்காக ஒரு பெண்ணை கொன்று அவரது உடலை எரிக்க கொலையாளிகள் திட்டமிட்டிருந்தனர். இதன் மூலம், சோனம் தலைமறைவாக இருக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு விவேக் சையம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.