ஹிருணிகா பிரேமச்சந்திர தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிரான் வழக்கை 2026 மார்ச் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதனையடுத்து வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கு மார்ச் 16 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.