மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த வீடு
மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (07) இரவு காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பற்றியதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.