;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் நடு வீதியில் பலியான குடும்பபெண் ; கோர விபத்தால் துயரம்

0

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் எதிரே வந்த கார் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண் 44 வயதுடைய இயக்கச்சி பளை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.