;
Athirady Tamil News

பாரிய ரயில் விபத்துக்கு வழிவகுத்த மொழிப் பிரச்சினை: சிந்திக்க வைத்துள்ள ஒரு செய்தி

0

வெளிநாடுகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில், தங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் வேலை தேடுவோருக்கு புலமை இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுண்டு.

அது எவ்வளவு முக்கியமானது என்பதை, சமீபத்தில் தவிர்க்கப்பட்ட விபத்து ஒன்று வெளிப்படுத்தியுள்ளது!

விபத்துக்கு வழிவகுத்த மொழிப் பிரச்சினை
சுவிட்சர்லாந்திலுள்ள Neuchâtel-Vauseyon என்னுமிடத்தில், இரண்டு ரயில்கள் எதிரெதிரே பயணித்துக்கொண்டிருந்திருக்கின்றன.

ஒரு பாரிய விபத்து நிகழ இருந்த நிலையில், தங்கள் ரயில்கள் எதிரெதிரே பயணிக்கின்றன என்பதை அறிந்து, 50 மீற்றர் இடைவெளியில் சாரதிகள் இரண்டு ரயில்களையும் நிறுத்தியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

நடந்தது என்னவென்றால், ரயில் சாரதிகள் ஜேர்மன் மொழி பேசுபவர்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருப்பவர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள். ஜேர்மன் மொழி பேசும் சாரதிகளுக்கு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிரெஞ்சு மொழியில் பேசும் அலுவலர்கள் கொடுத்த தகவல்கள் புரியவில்லை.

ஜேர்மன் மொழி பேசும் யாரையாவது உதவிக்கு அழையுங்கள் என்று கோரியுள்ளார்கள் சாரதிகள்.

ஆனால், அங்கு ஜேர்மன் மொழி பேசும் அலுவலர்கள் யாரும் இல்லை!

விடயம் என்னவென்றால், இவர்கள் அனைவருமே தேவையான மொழித்தகுதி உடையவர்கள்தான். என்றாலும், ஒரு அவசர நேரத்தில் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அவர்களால் இயலாமல் போயுள்ளது.

ஆக, ஒரு வேலைக்கு மொழிப்புலமை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த விடயம் காட்டுவதுடன், மொழித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் போதாது, இதுபோன்ற அவசர நேரங்களில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு பயிற்சி தேவை என்பதையும், தவிர்க்கப்பட்ட இந்த விபத்து தெளிவுபடுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.