;
Athirady Tamil News

தங்குமிடத்தில் பரவிய தீ ; பரிதாபமாக பலியான இளைஞன்

0

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.