;
Athirady Tamil News

நாய் மீது மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு

0

ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் நாய் மீது மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த நாய் ஒன்று மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மீஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.